முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எப்படியாக இருந்தாலும் மனோஜிடம் தோற்றுவிட்ட பாரதிராஜா

மனோஜ் : தமிழ்சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குனரின் மகன். பாரதிராஜா படங்களில் சாதீயம் இருந்தாலும் தமிழகத்தின் கிராமங்களை கொஞ்சம் காட்டியவர் என்ற வகையில் அவர் படங்கள் தமிழ் சினிமாவின் புதியபாதை என சொல்ல முடியும். அவரை யொற்றி சிலர் அவரையும் தாண்டி சென்றார்கள். ஆனாலும் அவரின் பாதை தனிப்பாதைதான்.

மனோஜ். தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக உச்சம் தொட வேண்டியவர். அவரின் முகம் இயல்பாகவே குற்ற உணர்ச்சி கதாபாத்திரத்திற்கு அப்டியே பொறுந்தி போகும் தன்மையுள்ளது. பல படங்களில் மனோஜ் நடித்திருந்தாலும் அல்லி அர்ஜூனா, கடல் பூக்கள் அவர் பயணத்தில் முக்கியமானது.  இரண்டு படங்களில் இறுதிக்காட்சியில் அவர் அந்த கதாபாத்திரத்தின் ஒட்டுமொத்த தோல்வியை கொண்டு வந்திருப்பார். ஆனால் இரண்டுமே கண்டுகொளப்படவில்லை.  பெரிய வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. அவரும் அமைத்துக் கொள்ளவில்லை.

பாரதிராஜா அவருக்கு கொடுத்த துவக்கம் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என நினைக்கிறேன். கல்லையும் நடிக்க வைப்பார் என்பது பாரதிராஜா பற்றி சொல்லும் சொல். ஆனால் பாரதிராஜாவின் திரைகதையாக்கத்தில் ஒரு கல்லும் நடிகராக தெரியும் என்றே நான் நினைக்கிறேன். அந்த பாரதிராஜா தாஜ்மஹால் படத்தில் திரைகதையை கவனிக்காமல் விட்டார். வியூ பைண்டரில் பாரதிராஜாவுக்கு  மனோஜ் நடிகராக தெரியாமல் மகனாக தெரிந்து தொலைத்தார் போல... பாடல்கள் ஹிட்டடித்து, திரையுலக பிரம்மாக்கள் ஆசிர்வாதம் செய்தும்... படம் பெரும் பின்னடவை சந்தித்தது. 

இந்த பெரும் தோல்வியை  மனோஜ்  காலம் முழுக்க சுமக்க நேரிட்டது. பொம்மலாட்டம் படத்தின் மூலம் மீண்டும் தான் யாரென பாரதிராஜா நீருபித்தாலும் மனோஜுக்கு அப்படியொரு வாய்ப்பு அமையவே இல்லை.  சில நேரம் சில அடையாளங்கள் சிலரை பெரிதாக ஜொலிக்கவிடாது. அதனை உடைப்பது பெரிய காரியம். எல்லாராலும் அது முடியவில்லை. மனோஜால் முடியவில்லை. அல்லது அவர் விரும்பவில்லை. 

மனோஜை முதலில் இருந்தே கதைகேட்டு கதை சொல்லி இயக்கி பழக்கி இருந்தால் இந்நேரம் வெறு ஒரு உச்சம் தொட்டு இருப்பாரோ என தோன்றுகிறது. ஆனால் அதற்கும் பெரிதாக வாய்ப்பில்லை. பாரதிராஜா பண்ணைப்புரத்திலிருந்து பசியோடு கிளம்பியவர். ஆனால் மனோஜ் சென்னையில் இருந்து ஏசி காரில் ஷூட்டிங் ஸ்பாட் வந்தவர். அதனால் இருக்கலாம்.

எப்படியாக இருந்தாலும் பாரதிராஜா பல வெற்றிகளை சூடி இருந்தாலும், இயக்குனராக தமிழ் திரையுலக வரலாற்றில்  தடம் பதித்திருந்தாலும் மனோஜிடம் அவர் தோற்றுவிட்டார். மரணத்திலும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...